
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி. அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை [ மேலும் படிக்க …]
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன். ஓடி ஆட ஒருநேரம். உணைவ [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment