மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
குட்டி குட்டி குட்டிமா
தவளை ஆசை கேளம்மா!
கோடைக் காலம் போனதம்மா
மாரிக் காலம் வந்ததம்மா
தவளை எல்லாம் கத்துதம்மா
வானவில் மேலே ஏறணுமாம்
வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்
பச்சைமஞ்சள் சிவப்பு நீலம்
வண்ணம் பூசி வந்தம்மா
வண்டு பூச்சி கவர்ந்ததம்மா
மின்னல் ஒளி வேண்டுமாம்
மின்மினி போல் மின்னணுமாம்
நீள நாக்கு நீளணுமாம்
விண்மீனைப் பிடிக்கணுமாம்!
குட்டி குட்டி குட்டிமா
தவளை ஆசை கேளம்மா!