நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

moon

நிலா நிலாஅழ. வள்ளியப்பா கவிதை

‘நிலா, நிலா, ஓடிவா.

        நில்லாமல் ஓடிவா’

பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே !

moon-2

மலை மேலே ஏறி நீ
வருவாய் என்றே எண்ணினோம்.

மல்லி கைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.

Full Moon

எத்த னைநாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.

சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.

Moon - Space Shuttle

உன்னை விரும்பி அழைத்துமே
        ஓடி நீ வராததால்

விண்க லத்தில் ஏறியே
      விரைவில் வருவோம் உன்னிடம் !

Moon Landing Apollo-15

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.