
நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை
தோ… தோ… நாய்க்குட்டி,
துள்ளி வாவா நாய்க்குட்டி.
உன்னைத் தானே நாய்க்குட்டி,
ஓடி வாவா நாய்க்குட்டி.

கோபம் ஏனோ நாய்க்குட்டி?
குதித்து வாவா நாய்க்குட்டி.
கழுத்தில் மணியைக் கட்டுவேன்;
கறியும் சோறும் போடுவேன்.

இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு !
Be the first to comment