
பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை
பாப்பா, பாப்பா, அழாதே!
பலூன் தாரேன்; அழாதே!
கண்ணே பாப்பா, அழாதே!
காசு தாரேன்; அழாதே!

பொன்னே பாப்பா, அழாதே!
பொம்மை தாரேன்; அழாதே!
முத்துப் பாப்பா, அழாதே!
மிட்டாய் தாரேன்; அழாதே!

என்ன வேண்டும்? சொல் பாப்பா.
எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா.
சரி சரி பாப்பா, தருகின்றேன்.
சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா.

Be the first to comment