குருவிரொட்டி இணைய இதழ்

பள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்


பள்ளிக்கூடம் திறக்கும் காலம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள்

பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.
பாலர் பையைத் தூக்கும் காலம்.

மணியின் ஓசை கேட்கும் காலம்.
மாண வர்கள் கூடும் காலம்.

வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.
வகுப்பு மாறி இருக்கும் காலம்.

புத்த கங்கள் வாங்கும் காலம்.
புரட்டிப் புரட்டிப் பார்க்கும் காலம்.

பரீட்சை தன்னில் தேர்ச்சி பெற்ற
பாலு ஜோராய் நடக்கும் காலம்.

தோற்றுப் போன கோபு மூஞ்சி
தொங்கிப் போச்சு, ஐயோ, காலம் !