
வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை
வாழைமரம் வாழைமரம்
வழவழப்பாய் இருக்கும் மரம்
சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்
தின்னத்தின்னக் கொடுக்கும் மரம்.

பந்திவைக்க இலைகளெலாம்
தந்திடுமாம் அந்த மரம்.

காயும்பூவும் தண்டுகளும்
கறிசமைக்க உதவும் மரம்.

கலியாண வாசலிலே
கட்டாயம் நிற்கும் மரம்!

Be the first to comment