
வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை
வண்ணக் கிளியே, வீடெங்கே?
மரத்துப் பொந்தே என்வீடு.

தூக்கணாங் குருவி, வீடெங்கே?
தொங்குது மரத்தில் என்வீடு.

கறுப்புக் காகமே, வீடெங்கே?
கட்டுவேன் மரத்தில் என்வீடு.

பொல்லாப் பாம்பே, வீடெங்கே?
புற்றும் புதருமே என்வீடு.

கடுகடு சிங்கமே, வீடெங்கே?
காட்டுக் குகையே என்வீடு.

நகரும் நத்தையே, வீடெங்கே?
நகருதே என்னுடன் என்வீடு!

Be the first to comment