விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
கடற்கரைக்குச் சென்றேனே
கடல்அலையை ரசித்தேனே!
கோளரங்கம் சென்றேனே
விண்வெளியை ரசித்தேனே
அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனே
சிந்திக்க லானேனே
தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனே
தொன்மைதனை உணர்ந்தேனே
பூங்காவுக்குச் சென்றேனே
பூக்கள்எல்லாம் ரசித்தேனே
நூலகங்கள் சென்றேனே
அறிவுதனை வளர்த்தேனே!