
யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி
யானை வருது, யானை வருது
பார்க்க வாருங்கோ.அசைந்து, அசைந்து நடந்து வருது
பார்க்க வாருங்கோ.கழுத்து மணியை ஆட்டி வருது
பார்க்க வாருங்கோ.காதைக் காதை அசைத்து வருது
பார்க்க வாருங்கோ.நெற்றிப் பட்டம் கட்டி வருது
பார்க்க வாருங்கோ.நீண்ட தந்தத் தோடே வருது
பார்க்க வாருங்கோ.தும்பிக் கையை வீசி வருது
பார்க்க வாருங்கோ.தூக்கி ‘சலாம்’ போட்டு வருது
பார்க்க வாருங்கோ.

Be the first to comment