மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்!
மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு படமெடுத்து, மெதுவான நிகழ்வுகளை வேகமாக ஓட விட்டு (Time-lapse Video) நமக்குக் காட்டியிருக்கிறது நேஷனல் ஜியோக்ரஃபிக் (National Geographic) சானல். கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியைச் சொடுக்கி, இந்த வியப்பூட்டும் நிகழ்வைப் பாருங்கள்!
ஒரு விதையிலிருந்து செடி முளைத்து, வேர்கள் விட்டு நன்கு வளர பல நாட்கள் ஆகும். இவ்வாறு 25 நாட்களுக்கு விதையிலிருந்து முளைத்து, வளர்ந்து வளரும் ஒரு செடியைப் படமாக்கி சில நிமிடங்களில் நமக்குக் காட்டுகிறது ஜி-ஃபேஸ் (GPhase) எனும் சானல். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அருமையான படத்தை அறிவியல் பாடம் படிக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள். விதையிலிருந்து செடியின் ஒவ்வொரு பாகமும் வளர்வதைக் கண்கூடாகக் கண்டால், அவர்களது பாடப்புத்தகத்தில் தாவரம் தொடர்பாக உள்ள பாடத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும்!