உங்கள் கைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) பேட்டெரியின் ஆற்றலை சேமிக்க வேண்டுமா? கீழ்க்கண்ட சில வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பயனிகளை (Apps) நீக்கி (Uninstall) விடுங்கள். ஒருவேளை, நீங்கள் எப்போதாவது அறிதாகப் பயன்படுத்தக் கூடிய சில பயனிகள் இருந்தால், அவற்றை பயன் படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில், முடக்கி (Disable / Deactivate) விடுங்கள்.
- நீங்கள் பயன்படுத்தாக நேரத்தில், கைபேசியை, மின் திறன் சேமிப்பு (Power Saver Mode) அமைப்பில் போட்டு விடுங்கள்.
- ஒலிப் பெருக்கியின் (Speaker) ஒலி அளவைக் குறைத்து தேவையான அளவு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
- கைபேசியின் திரையின் காட்சியின் ஒளி (Screen Display Brightness) அளவைக் குறைத்து தேவையான அளவு மட்டும் வையுங்கள்.
- கைபேசி, வைஃபை லேன் (WLAN) அல்லது வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டில், அது வேறு எந்த கருவியுடனும் இணைக்கப் படாமல் இருந்தால், வைஃபை லேன் / வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை முடக்கவும்.
- ப்ளூடூத் வயர்லெஸ் பயன் படுத்தாத நேரத்தில், அதை முடக்கி விடவும்.
- கூகுள் குரோம் போன்ற இணைய உலாவி சன்னல்களைப்(Internet Browser Windows) பயன்படுத்தாத போது அவற்றை மூடி விடவும்.
- கைபேசியின் ஓ.எஸ். – ஐ (ஆப்பெரேட்டிங்க் சிஸ்டெம் / Operating System), தன்னிச்சையாக மேம்படுத்தும் (Automatic Updates) படி, அதன் அமைப்பைச் சரி செய்து கொள்ளவும்.
- பொதுவாக, கைபேசியின் பேட்டெரி 15% முதல் 20% வரை இருக்கும்போது, அதை மின்னேற்றம் (பேட்டெரி சார்ஜ் – Battery Charging) செய்யவும். முழுமையாக (0%) பேட்டெரி மின்னிறக்கம் / தீரும் (Battery Discharge) வரை காத்திருக்க வேண்டாம்.
Be the first to comment