தரையிறங்கத் தெரியாத ஆல்பட்ராஸ் (Albatross) எனும் கடல் பறவை – Birds with Landing Trouble
ஆல்பட்ராஸ் (Albatross) எனப்படும் சாம்பல் நிற தலையை உடைய கடல் பறவைகள், நீண்ட தொலைவு பறக்கும் திறன் படைத்தவை. ஆனால், ஒரே பயணத்தில் 13,000 கி.மீ தூரம் வரம் பறக்கக்கூடிய வல்லமை படைத்த இந்தப் பறவைகளுக்கு, தரையிறங்குவதில் கொஞ்சம் சிக்கல் உள்ளது.
ஆம்! நன்கு பறக்கும் ஆற்றல் படைத்த இப்பறவைகளுக்குச் சரியாகத் தரையிறங்கத் தெரியாது! இதனால், சில நேரங்களில் தவறுதாக அவற்றின் குஞ்சுப் பறவைகளின் மீதே தரையிறங்கிவிடுகின்றன. இந்தக் காட்சியைக்கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிப் பார்க்கலாம். தரையில் இருக்கும் மற்றொரு ஆல்பட்ராஸ் பறவை, தம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பறவை தரையிறங்கும்போது பயந்து விலகி ஓடும் வேடிக்கைக் காட்சியையும் இந்தக் காணொளியில் காணலாம்!