ஒப்பொலி (Mimicry) எழுப்பும் யாழ் பறவை (Lyrebird)
ஆஸ்திரேலியாவில் வாழும் யாழ் பறவைக்கு (Lyrebird) ஒரு அரிய குணம் உண்டு! பிற பறவைகள் எழுப்பும் ஒலிகளைப் போலவும், அதைச் சுற்றி அது கேட்கும் மற்ற ஒலிகளைப் போலவும், இந்தப் பறவையால் ஒலியெழுப்ப முடியும். அதாவது ஒப்பொலி எழுப்பும் நம் கலைஞர்களைப் (Mimicry Artists) போல, இப்பறவையால் அது கேட்கும் ஒலிகளை ஒத்து அதேபோல் ஒலியெழுப்ப முடியும்! யாழ்பறவையால் பிற பறவைகளின் ஒலி, ஒளிப்படக்கருவியின் ஒலி, எச்சரிக்கை ஒலி, அரத்தின் (ரம்பம்) ஒலி, எனப் பல வகையான ஒலிகளை எழுப்ப முடியும்! யாழ் இசைக் கருவியை போன்ற அழகிய வால் பகுதியைக் கொண்ட ஆண் யாழ் பறவை, தன் காதலிக்காக இப்படி மேடை அமைத்து, ஒப்பொலிக் காட்சியை அரங்கேற்றம் செய்கிறதாம்! நம்பமுடியவில்லையா? பிபிசியின் கீழ்கண்ட காணொளிக்காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள்: