2020-ஆம் ஆண்டில் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை எப்படி தோற்றமளிக்கும்? – நாசாவின் காணொளி (NASA’s video showing various phases of Moon in 2020)
2020-ஆம் ஆண்டில் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் வெவ்வேறு கட்டங்கள் / நிலைகள் எப்படி இருக்கும் என்பதை அழகாகக் காண்பிக்கிறது அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள காணொளிக்காட்சி (NASA’s video showing various phases of Moon in 2020). பூமியைச் சுற்றிவரும் நிலா, பூமியின் வட அரைக்கோளத்தைப் பொறுத்து, ஒவ்வொரு மணி நேரத்திலும், எந்த இடத்தில், எந்த கோணத்தில் எப்படி ஒளிரும் என்பதை இந்த காணொளி மூலம் நாம் கண்டறியலாம். மேலும், இந்த ஆண்டு முழுதும் தோன்றும் அமாவாசை, வளர்பிறை, பௌணர்மி மற்றும் தேய்பிறை ஆகியவற்றைப் பார்ப்பதுடன், அவற்றிற்கான நாட்களையும் தெரிந்து கொள்ளலாம்.
காணொளியின் இடப்பக்க மேல் மூலைப் பகுதியில் (Top left corner), நிலவு பூமி சுற்றிவரும் படத்தையும் காணலாம். நிலவின் அந்த நிலை மற்றும் கோணத்திற்கேற்பத்தான் நிலவின் ஒளியின் அளவு மற்றும் கோணம் அமைகிறது.
இதைக் காண ஆர்வமாக இருக்கிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியைச் சொடுக்கிப் பார்க்கவும்: