Thiruvalluvar
திருக்குறள்

நாண்வேலி கொள்ளாது மன்னோ – குறள்: 1016

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர். – குறள்: 1016 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பரந்த இந்த உலகில் எந்தப் பாதுகாப்பையும்விட, நாணம் எனும்வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக்கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர்; தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாணால் உயிரைத் துறப்பர் – குறள்: 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாண்ஆள் பவர். – குறள்: 1017 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளஉயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகமானத்தை விடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறர்நாணத் தக்கது தான்நாணான் – குறள்: 1018

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்அறம்நாணத் தக்கது உடைத்து. – குறள்: 1018 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காகவெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டுஅகன்று விட்டதாகக் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்டாருங் கேட்டாருமாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் – குறள்: 1019

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்நாண்இன்மை நின்றக் கடை. – குறள்: 1019 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும்.அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்அகத்து இல்லார் இயக்கம் – குறள்: 1020

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று. – குறள்: 1020 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சூழாமல் தானே முடிவுஎய்தும் – குறள்: 1024

சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. – குறள்: 1024 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் குடியை யுயர்த்துதற்கேற்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் – குறள்: 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்று தான்முந் துறும் – குறள்: 1023 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாதுஉழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை என் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் – குறள்: 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையான் நீளும் குடி. – குறள்: 1022 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராதுபாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முயற்சியும் நிறைந்த அறிவும் என்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொல்லா நலத்தது நோன்மை – குறள்: 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. – குறள்: 984 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோன்மை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் – குறள்: 985

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. – குறள்: 985 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து [ மேலும் படிக்க …]