அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.