
திருக்குறள்
அன்புஈனும் ஆர்வம் உடைமை – குறள்: 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.