Thiruvalluvar
திருக்குறள்

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் – குறள்: 445

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். – குறள்: 445 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மந்திரிமாரைக் கண்ணாகக் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக – குறள்: 446

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை – குறள்: 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர். – குறள்: 447 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்றுநடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிப்பாரை இல்லாத ஏமரா – குறள்: 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்சார்புஇலார்க்கு இல்லை நிலை. – குறள்: 449 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தானம் தவம்இரண்டும் தங்கா – குறள்: 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்காது எனின். – குறள்: 19 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; வியன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் குறள்: 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு – குறள்: 218

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை எனஒரு பாவி மறுமையும் – குறள்: 1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையும் மறுமையும் இன்றி வரும் [ மேலும் படிக்க …]