செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்
திருக்குறள்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – குறள்: 301

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துகாக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினம் தாக்கக் கூடிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருக்கத்து வேண்டும் பணிதல் – குறள்: 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலைமாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மானஉணர்வும் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப் [ மேலும் படிக்க …]

கருமம் செயஒருவன் கைதூவேன்
திருக்குறள்

கருமம் செயஒருவன் கைதூவேன் – குறள்: 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]

இரப்பன் இரப்பாரை எல்லாம்
திருக்குறள்

இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று
திருக்குறள்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று – குறள்: 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. – குறள்: 695 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை பிறர் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
திருக்குறள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு – குறள்: 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் -குறள்: 228

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்துஇழக்கும் வன் கணவர். – குறள்: 228 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரத்தலின் இன்னாது மன்ற குறள்: 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல். – குறள்: 229 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்கொடுமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் ஈட்டக் கருதிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சாதலின் இன்னாதது இல்லை – குறள்: 230

சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்ஈதல் இயையாக் கடை. – குறள்: 230 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாதமனத்துன்பம் பெரியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் [ மேலும் படிக்க …]