Thiruvalluvar
திருக்குறள்

இன்மையுள் இன்மை விருந்துஒரால் – குறள்: 153

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்கமுடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

புத்தேள் உலகத்தும் ஈண்டும்
திருக்குறள்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதேஒப்புரவின் நல்ல பிற. – குறள்: 213 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவு [ மேலும் படிக்க …]

எய்தற்கு அரியது இயைந்தக்கால்
திருக்குறள்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் – குறள்: 489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற்கு அரிய செயல். – குறள்: 489 அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு [ மேலும் படிக்க …]

புறம்குன்றி கண்டனைய ரேனும்
திருக்குறள்

புறம்குன்றி கண்டனைய ரேனும் – குறள்: 277

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றிமூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிக் கோலத்தில் [ மேலும் படிக்க …]

குடிஆண்மை யுள்வந்த குற்றம்
திருக்குறள்

குடிஆண்மை யுள்வந்த குற்றம் – குறள்: 609

குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609 – அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓர் அரசன் தன் [ மேலும் படிக்க …]

அருவினை என்ப உளவோ
திருக்குறள்

அருவினை என்ப உளவோ – குறள்: 483

அருவினை என்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். – குறள்: 483 – அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தேவையான கருவிகளுடன் உரிய நேரத்தையும் அறிந்துசெயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமைஎல்லா அறமும் தரும். – குறள்: 296 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையில் [ மேலும் படிக்க …]

நகைஈகை இன்சொல் இகழாமை
திருக்குறள்

நகைஈகை இன்சொல் இகழாமை – குறள்: 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. – குறள்: 953 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள் கலைஞர் உரை முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இகலானாம் இன்னாத எல்லாம் – குறள்: 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. – குறள்: 860 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே [ மேலும் படிக்க …]

இன்சொலால் ஈத்துஅளிக்க
திருக்குறள்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு – குறள்: 387

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.