திருக்குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லைஅதிர வருவதோர் நோய். – குறள்: 429 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உணர்வது உடையார்முன் சொல்லல் – குறள்: 718

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அல்லவை தேய அறம்பெருகும் – குறள்: 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின். – குறள்: 96 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாற் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி – குறள்: 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழிஎன்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் – குறள்: 132

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்தேரினும் அஃதே துணை. – குறள்: 132 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால்,  எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக்  காக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தை எவ்வகையிலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – குறள்: 428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவர்கள்தான்  அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். – குறள்: 121 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல – குறள்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் – குறள்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். – குறள்: 138 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலத்தினால் செய்த நன்றி – குறள்: 102

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. – குறள்: 102 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் [ மேலும் படிக்க …]