Thiruvalluvar
திருக்குறள்

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் – குறள்: 709

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசரின் பார்வை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று – குறள்: 939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயம் கொளின். – குறள்: 939 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாட்டத்திற்கு அடிமையாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும்,கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை – குறள்: 855

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரேமிகல்ஊக்கும் தன்மை யவர். – குறள்: 855 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க – குறள்: 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. – குறள்: 882 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகல்என்ப எல்லா உயிர்க்கும் – குறள்: 851

இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்பண்புஇன்மை பாரிக்கும் நோய். – குறள்: 851 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு; இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகல்கருதிப் பற்றா செயினும் – குறள்: 852

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னா செய்யாமை தலை. – குறள்: 852 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் – குறள்: 853

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்தாஇல் விளக்கம் தரும். – குறள்: 853 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு என்னும் நோயை யார் தாங்கள் மனத்தை விட்டுஅகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை – குறள்: 856

இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து. – குறள்: 856 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது எனஎண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டுகெட்டொழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் – குறள்: 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர். – குறள்: 857 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்குவழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; வெற்றியொடு பொருந்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை – குறள்: 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. – குறள்: 858 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]