திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – குறள்: 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி – குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்: 60 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் – குறள்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். – குறள்: 2 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் – குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. – குறள்: 1 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் – குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – குறள்: 45 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

முகநக நட்பது நட்பன்று – குறள்: 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நீர்இன்று அமையாது உலகு – குறள்: 20

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்: 20 – அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று [ மேலும் படிக்க …]