Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – குறள்: 891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. – குறள்: 891 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதுஇருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். . ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரியாரைப் பேணாது ஒழுகின் – குறள்: 892

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்பேரா இடும்பை தரும். – குறள்: 892 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காதபெருந்துன்பத்தை அடைய நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடல்வேண்டின் கேளாது செய்க – குறள்: 893

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. – குறள்: 893 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். . ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் – குறள்: 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல். – குறள்: 894 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன்,சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களேதங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்று தான் பொருள். . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் – குறள்: 895

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர். – குறள்: 895 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள்தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழமுடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிக்க [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் – குறள்: 896

எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். – குறள்: 896 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் – குறள்: 897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்தகைமாண்ட தக்கார் செறின். – குறள்: 897 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையானவாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின்- குறள்: 898

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து. – குறள்: 898 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏந்திய கொள்கையார் சீறின் – குறள்: 899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். – குறள்: 899 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் – குறள்: 900

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்சிறந்துஅமைந்த சீரார் செறின். – குறள்: 900 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது. . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]