Thiruvalluvar
திருக்குறள்

இமையாரின் வாழினும் பாடுஇலரே – குறள்: 906

இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்அமைஆர்தோள் அஞ்சு பவர். – குறள்: 906 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள்என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் – குறள்: 907

பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. – குறள்: 907 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின்ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் – குறள்: 908

நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்பெட்டாங்கு ஒழுகு பவர். – குறள்: 908 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்துநடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்;நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் விரும்பிய வாறன்றி அழகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறவினையும் ஆன்ற பொருளும் – குறள்: 909

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல். – குறள்: 909 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கிஇயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறச்செயலும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு – குறள்: 910

எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். – குறள்: 910 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் – குறள்: 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். – குறள்: 911 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் – குறள்: 912

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். – குறள்: 912 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் – குறள்: 913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்ஏதில் பிணம்தழீஇ யற்று. – குறள்: 913 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருட்பொருளார் புன்நலம் தோயார் – குறள்: 914

பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். – குறள்: 914 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளைமட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக்கருதுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொதுநலத்தார் புன்நலம் தோயார் – குறள்: 915

பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். – குறள்: 915 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; [ மேலும் படிக்க …]