No Picture
திருக்குறள்

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக – குறள்: 446

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை – குறள்: 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர். – குறள்: 447 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்றுநடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிப்பாரை இல்லாத ஏமரா – குறள்: 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்சார்புஇலார்க்கு இல்லை நிலை. – குறள்: 449 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை எனஒரு பாவி மறுமையும் – குறள்: 1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையும் மறுமையும் இன்றி வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாதது யாதுஎனின் – குறள்: 1041

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்இன்மையே இன்னா தது. – குறள்: 1041 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; [ மேலும் படிக்க …]

kokkokka koombum kural
திருக்குறள்

கொக்குஒக்க கூம்பும் பருவத்து – குறள்: 490

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்குத்துஒக்க சீர்த்த இடத்து. – குறள்: 490 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறிதவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பத்துள் இன்பம் பயக்கும் – குறள்: 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 854 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்: 473

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]