Thiruvalluvar
திருக்குறள்

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு – குறள்: 426

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடுஅவ்வது உறைவது அறிவு. – குறள்: 426 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோஅதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் [ மேலும் படிக்க …]

அறிவுஅற்றம் காக்கும் கருவி
திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி – குறள்: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லைஅதிர வருவதோர் நோய். – குறள்: 429 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல [ மேலும் படிக்க …]

உலகம் தழீஇயது ஒட்பம்
திருக்குறள்

உலகம் தழீஇயது ஒட்பம் – குறள்: 425

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்கூம்பலும் இல்லது அறிவு. – குறள்: 425 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால், அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அறிவு உடையார் ஆவது அறிவார்
திருக்குறள்

அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்அஃது அறிகல்லா தவர். – குறள்: 427 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்  சிந்திக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

எண்பொருள வாகச் செலச்சொல்லி – குறள்: 424

எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.            –  குறள்: 424                 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]

way-to-school
திருக்குறள்

சென்ற இடத்தால் செலவிடா – குறள்: 422

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.    – குறள்: 422         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  மனம்  போகும்  வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

திருக்குறள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – குறள்: 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.              – குறள்: 423                                 – அதிகாரம்: அறிவு உடைமை, [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

அறிவுடையார் எல்லாம் உடையார் – குறள்: 430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடையர் ஏனும் இலர்.           –   குறள்: 430                         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவு  இல்லாதவர்களுக்கு  [ மேலும் படிக்க …]