Thiruvalluvar
திருக்குறள்

புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க – குறள்: 719

புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்நன்குசெலச் சொல்லு வார். – குறள்: 719 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச்சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ளஅவையில் அறவே பேசாமலிருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் – குறள்: 720

அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல். – குறள்: 720 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது,தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல்லாதா ரவைக்கண் நிகழ்த்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் – குறள்: 721

வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின்தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 721 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லின் தொகுதியை யறிந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் – குறள்: 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். – குறள்: 722 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துச் சாவார் எளியர் – குறள்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். – குறள்: 723 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும்எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்க்களத்துள் அஞ்சாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லி – குறள்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லி தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல். – குறள்: 724 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து கற்க – குறள்: 725

ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சாமாற்றம் கொடுத்தற் பொருட்டு. – குறள்: 725 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழிசொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு – குறள்: 726

வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்நுண்அவை அஞ்சு பவர்க்கு. – குறள்: 726 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் – குறள்: 727

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல். – குறள்: 727 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லவை கற்றும் பயம்இலரே – குறள்: 728

பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்நன்கு செலச்சொல்லா தார். – குறள்: 728 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]