கதம்காத்து கற்றுஅடங்கல்
திருக்குறள்

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் – குறள்: 130

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. – குறள்: 130 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் [ மேலும் படிக்க …]

அற்றம் மறைத்தலோ புல்லறிவு
திருக்குறள்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. – குறள்: 846 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, [ மேலும் படிக்க …]

பழைமை எனப்படுவது யாதுஎனின்
திருக்குறள்

பழைமை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 801

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்
திருக்குறள்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் – குறள்: 694

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்ஆன்ற பெரியார் அகத்து. – குறள்: 694 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள்பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
திருக்குறள்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் [ மேலும் படிக்க …]

அற்றார் அழிபசி தீர்த்தல்
திருக்குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் – குறள்: 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்பெற்றான் பொருள்வைப்பு உழி. – குறள்: 226 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். ஞா. [ மேலும் படிக்க …]

சினத்தைப் பொருள்என்று கொண்டவன்
திருக்குறள்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் – குறள்: 307

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடுநிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. – குறள்: 307 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் – குறள்: 294

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ [ மேலும் படிக்க …]

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல்
திருக்குறள்

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் – குறள்: 710

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்கண்அல்லது இல்லை பிற. – குறள்: 710 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணியம் என்பார் [ மேலும் படிக்க …]

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
திருக்குறள்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]