திருக்குறள்

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசுஅற்றார் கோள். – குறள்: 646 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் – குறள்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் – குறள்: 643 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால் கலைஞர் உரை கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

குழல்இனிது யாழ்இனிது என்ப – குறள்: 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். – குறள்: 66 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல் கலைஞர் உரை தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் – குறள்: 648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின். – குறள்: 648 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள், இயல்: அமைச்சியல் கலைஞர் உரை வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும்வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்ல வேண்டிய செய்திகளை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை – குறள்: 61

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்தமக்கட்பேறு அல்ல பிற. – குறள்: 61 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பின் – குறள்: 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. – குறள் : 781 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் – குறள்: 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

திறன்அறிந்து சொல்லுக சொல்லை – குறள்: 644

திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். – குறள்: 644 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]