
திருக்குறள்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.