Thiruvalluvar
திருக்குறள்

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் – குறள்: 573

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 573 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராதகண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உளபோல் முகத்துஎவன் செய்யும் – குறள்: 574

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 574 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுந்த அளவிற்குக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் – குறள்: 576

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடுஇயைந்துகண் ணோடா தவர். – குறள்: 576 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் – குறள்: 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. – குறள்: 579 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் – குறள்: 580

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். – குறள்: 580 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமம் சிதையாமல் கண்ணோட – குறள்: 578

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்துஇவ் உலகு. – குறள்: 578 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாகஇருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் – குறள்: 577

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். – குறள்: 577 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்;கண்ணுடையவர் எப்போதேனும் என்ன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் – குறள்: 572

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்உண்மை நிலக்குப் பொறை. – குறள்: 572 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடை கண்ணோட்டத்தினால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் – குறள்: 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்புண் என்று உணரப்படும். – குறள்: 575 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் [ மேலும் படிக்க …]

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
திருக்குறள்

கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை – குறள்: 571

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டுஇவ் வுலகு. குறள்: 571 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்டம் என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]