
திருக்குறள்
சென்ற இடத்தால் செலவிடா – குறள்: 422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.