உடுக்கை இழந்தவன் கைபோல்
திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல் – குறள்: 788

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதுஆம் நட்பு. – குறள்: 788 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அணிந்திருக்கும்  உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு   அதனைச  சரிசெய்ய  உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப்   போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு [ மேலும் படிக்க …]

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்
திருக்குறள்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நுண்ணிய நூல்பல கற்பினும்
திருக்குறள்

நுண்ணிய நூல்பல கற்பினும் – குறள்: 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]

விசும்பின்
திருக்குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால் – குறள்: 16

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. – குறள்: 16 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலைகாண்பது அரிதான ஒன்றாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி பின் அப்பொழுதே பசும்புல் [ மேலும் படிக்க …]

மாறுபாடு இல்லாத உண்டி
திருக்குறள்

மாறுபாடு இல்லாத உண்டி – குறள்: 945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, [ மேலும் படிக்க …]

self restraint
திருக்குறள்

காக்க பொருளா அடக்கத்தை – குறள்: 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. – குறள்: 122 -அதிகாரம்: அடக்கம் உடைமை; பால்: அறம் கலைஞர் உரை மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்களுக்கு அதனினும் சிறந்து [ மேலும் படிக்க …]

அறன் அழீஇ அல்லவை
திருக்குறள்

அறன் அழீஇ அல்லவை – குறள் 182

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர்   இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப்   புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]

Kaanaathaan - kural - 849
திருக்குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை   அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே  அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]

Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.