Thiruvalluvar
திருக்குறள்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் – குறள்: 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காணாச் சினத்தான் கழிபெரும் – குறள்: 866

காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்பேணாமை பேணப் படும். – குறள்: 866 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற – குறள்: 867

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்துமாணாத செய்வான் பகை. – குறள்: 867 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரைத் தொடங்கி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணன்இலனாய் குற்றம் பலஆயின் – குறள்: 868

குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்குஇனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் – குறள்: 869

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். – குறள்: 869 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லான் வெகுளும் சிறுபொருள் – குறள்: 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லாது ஒளி. – குறள்: 870 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]