Thiruvalluvar
திருக்குறள்

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் – குறள்: 686

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்தக்கது அறிவதுஆம் தூது. – குறள்: 686 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்துஎண்ணி உரைப்பான் தலை. – குறள்: 687 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசரிடம் தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தூய்மை துணைமை துணிவுஉடைமை – குறள்: 688

தூய்மை துணைமை துணிவுஉடைமை இம்மூன்றின்வாய்மை வழிஉரைப்பான் பண்பு. – குறள்: 688 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்தேவையானவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; வேற்றரசரின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் – குறள்: 689

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன். – குறள்: 689 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதிபடைத்தவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறுதி பயப்பினும் எஞ்சாது – குறள்: 690

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதுஆம் தூது. – குறள்: 690 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்துவிடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் கூறுஞ்செய்தியால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அகலாது அணுகாது தீக்காய்வார் – குறள்: 691

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். – குறள்: 691 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோலஅதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மன்னர் விழைப விழையாமை – குறள்: 692

மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கம் தரும். – குறள்: 692 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையானஆக்கத்தை அளிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மால் அடுக்கப் பட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

போற்றின் அரியவை போற்றல் – குறள்: 693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது. – குறள்: 693 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவிரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்புஅறிந்து காலம் கருதி – குறள்: 696

குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇலவேண்டுப வேட்பச் சொலல். – குறள்: 696 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்ககாலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும் – குறள்: 697

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல். – குறள்: 697 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை [ மேலும் படிக்க …]