நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

திறன்அறிந்து சொல்லுக சொல்லை – குறள்: 644

திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். – குறள்: 644 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தம்பொருள் என்பதம் மக்கள்
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்மரம்மக்கள் ஆதலே வேறு. – குறள்: 600 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அவ்வூக்கமிகுதியில்லாதவர் [ மேலும் படிக்க …]

அமிழ்தினும் ஆற்ற இனிதே
திருக்குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் – குறள்: 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் – குறள்: 751

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்பொருள்அல்லது இல்லை பொருள். – குறள்: 751 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரால் ஒரு [ மேலும் படிக்க …]

செய்தக்க
திருக்குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் – குறள்: 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். – குறள்: 466 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் வினைக்குச் [ மேலும் படிக்க …]