தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
திருக்குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை – குறள்: 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]

கற்றறிந்தார் கல்வி விளங்கும்
திருக்குறள்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் – குறள்: 717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய [ மேலும் படிக்க …]

உலகம் தழீஇயது ஒட்பம்
திருக்குறள்

உலகம் தழீஇயது ஒட்பம் – குறள்: 425

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்கூம்பலும் இல்லது அறிவு. – குறள்: 425 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால், அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

தெய்வத்தான் ஆகாது எனினும்
திருக்குறள்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி: குறள்: 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். குறள்: 619 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]

அறிவு உடையார் ஆவது அறிவார்
திருக்குறள்

அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்அஃது அறிகல்லா தவர். – குறள்: 427 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்  சிந்திக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய [ மேலும் படிக்க …]

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார்
திருக்குறள்

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் – குறள்: 417

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப்  பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க …]

அறத்தான் வருவதே இன்பம்
திருக்குறள்

அறத்தான் வருவதே இன்பம் – குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. – குறள்: 39 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மையான நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ஞா. [ மேலும் படிக்க …]

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
திருக்குறள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை – குறள்: 463

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]