சென்னை புத்தகக் காட்சி 2020 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2020
பபாசியின் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (43rd Chennai Book Fair 2020 – BAPASI) 09-ஜனவரி-2020 முதல் 21-ஜனவரி-2020 வரை நடைபெறுகிறது! புத்தகப் பிரியரா நீங்கள்! இந்தப் புத்தாண்டை உங்கள் மனம் கவர்ந்த புத்தகங்களுடன் கொண்டாடுங்கள்!
2,00,000 சதுர அடி பரப்பில் 700-க்கும் மேற்பட்ட கடைகளிலிருந்து 5,00,000-க்கும் மேலான தலைப்புகளிலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கான அரிய வாய்ப்பு இது. மேலும், அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது!தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers’ and Publishers’ Association of South India ) ஆண்டுதோறும் நடத்தும் மிகப்பெரிய புத்தகத் திருவிழா (Book Festival) இது.
அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும், இலக்கியம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் போன்ற பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இங்கு கிடைக்கும்!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு (Chennai Book Fair) வந்து பயனடைகின்றனர்.
ஆண்டுதோறும், சென்னை புத்தகத் திருவிழாவின்போது (Chennai Book Fair) அறிவுசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன!
பபாசி சென்னை புத்தகக் கண்காட்சி (BAPASI Chennai Book Fair) 2020
- நாட்கள்: ஜனவரி-09-2020 முதல் ஜனவரி-21-2020 வரை
- இடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம், சென்னை
- நேரம்: திங்கள் – வெள்ளி: மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
- நேரம்: சனி, ஞாயிறு: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பபாசி-யின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்:
பபாசி சென்னை புத்தகக் காட்சி (BAPASI Chennai Book Fair) 2020