நோபல் பரிசு 2024 – Nobel Prize 2024
இந்த 2024-ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசுகளை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024
வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக
for her intense poetic prose that confronts historical traumas and exposes the fragility of human life
https://www.nobelprize.org/all-nobel-prizes-2024/
இலக்கியத்திற்கான 2024-ம் ஆண்டின் நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் தென்கொரியர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024
செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக
for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks
https://www.nobelprize.org/all-nobel-prizes-2024/
2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் (John J. Hopfield) மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜாஃப்ரே இ. ஹிண்டன் (Geoffrey E. Hinton) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியலுக்கான நோபல் பரிசு 2024
2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்கு அமெரிக்கவைச் சார்ந்த டேவிட் பேக்கர் (David Baker) என்பவருக்கும், புரத கட்டமைப்பு கணிப்புக்காக, இங்கிலாந்து நாட்டின் டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis), ஜான் எம். ஜம்பர் (John M. Jumper) (இங்கிலாந்து) ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024
மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய படியெடுப்பு மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு
for the discovery of microRNA and its role in post-transcriptional gene regulation
https://www.nobelprize.org/all-nobel-prizes-2024/
2024 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் (Victor Ambros) மற்றும் கேரி ருவ்குன் ஆகிய அமெரிக்கர்களுக்கு அறிவிக்கபட்டுள்ளது,
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024
“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்கு”
for studies of how institutions are formed and affect prosperity
https://www.nobelprize.org/all-nobel-prizes-2024/
அமெரிக்க நாட்டை சேர்ந்த டாரன் அசெமேக்லு (Darren Acemeglu), ஜேம்ஸ் ராபின்சன் (James Robinson), சைமன் ஜான்சன் (Simon Johnson) ஆகிய மூவருக்கும் 2024 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு 2024
“அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை சாட்சிகள் மூலம் நிரூபித்ததற்காகவும்”
for its efforts to achieve a world free of nuclear weapons and for demonstrating through witness testimony that nuclear weapons must never be used again
https://www.nobelprize.org/all-nobel-prizes-2024/
நிஹான் ஹிடாங்கியோ (Nihon Hidankyo) என்ற அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment