உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் – 05
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. – குறள்: 12
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
இத்தகைய சிறப்புடைய மழை நம் வாழ்வில், வளம் தர, மரம் வளர்ப்போம்; காடுகளைப் பாதுகாப்போம்; மழை நீரைச் சேகரிப்போம்!
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
கடல் நீர் வளம் குன்றாமல் இருக்க வேண்டுமானால், சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, உலகம் வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டும்!